| ªê¡¬ù, ñ£˜„ 11: ð£.ü. îIöè î¬ôõ˜ Þî¡ ªî£ì˜„Cò£è ï¬ìªðŸø õ¡º¬øJ™Þô.è«íê¡ «ïŸÁ ªõOJ†ì ÜP‚¬è: «èó÷£M™ êeðˆF™ è‡íÛ˜ T™ô£M™ ݘ.âv.âv ܬñЬð «ê˜‰î â‹.H ²«ów e¶ ªè£¬ôªõP °î™ ï쉶œ÷¶. 5 ݘ.âv.âv.-ð£ü ªî£‡ì˜èœ ð´ªè£¬ôò£ù£˜èœ. «ñ½‹, 6 «ð˜ CA„¬êJ™ àœ÷ù˜. Þ è‡ìù‹ ªîKMˆ¶ ªì™LJ™ ñ£˜‚Cv† ܽõôè‹ º¡¹ ܬñFò£è ݘŠð£†ì‹ ïìˆFòõ˜èœ e¶ èŸè¬÷ iC °î™ ïìˆF»œ÷ù˜. ãŸèù«õ ï‰FAó£ñˆF™ Þõ˜è÷¶ ²òÏð‹ ªõOŠð†´ M†ì¶. ÞQò£õ¶ è‹ÎQv†´èœ õ¡º¬ø¬ò ¬èM†´ üùï£òè ð£¬î‚° F¼‹ð «õ‡´‹. |
3.10.2008
ஓநாய் அழுகிறது...
11.05.2007
ஸ்ரீமத் ராமாயணம்...

ஈரோட்டுக் குடு குடு கிழவன் பிறந்து ஒரு நூறாண்டு ஓடிப்போய் விட்டது.
இன்னமும் இந்த கிழ வேங்கையின் புகழை எதிரகளே கர்ம சிரத்தையாக பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
செத்துப்போன பின்னும் பார்ப்பானுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் பெரியார்.இந்துத்வா இப்படி குமுறிக்கொள்ள அப்படி அந்தப் புத்தகதில் என்னதான் இருக்கிறதோ?. இன்னும் படிக்கவில்லை. படிக்கவேண்டும். இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா? என்ன?
வாழ்கா பெரியார் !
10.31.2007
குஜராத் கொடூரம் - குமுதம் ரிப்போர்ட்டர்.
சி.என்.என்._ஐ.பி.என்., தொலைக்காட்சியில் ஓர் அரசியல் நேர்காணல். நடத்தியவர் பிரபல அரசியல் பேட்டியாளர் கரன் தாப்பர். கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிரே இருப்பவரை சிக்கவைப்பதில் சமர்த்தர். நம்மூர் ஜெயலலிதா, வைகோ முதல் பல தேசியத் தலைவர்களை திக்குமுக்காட வைத்தவர். இந்தமுறை அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
ஒவ்வொரு கேள்வியும் தீப்பந்தாகப் பாய்ந்து வந்து மோதின. எல்லாவற்றையும் தனக்கேயுரிய பாணியில் சாமர்த்தியமாக எதிர்கொண்டார் மோடி. திடீரென ஒரு கேள்வி. அவ்வளவுதான். நெருப்பில் பட்ட ரப்பர் பலூன் போல சுருங்கியது மோடியின் முகம். என்னென்னவோ பேசினார். தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும் என்றார். பதில் சொல்லாமல் தப்பிக்கும் எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டார். விளைவு, பேட்டி பாதியிலேயே முடிக்கப்பட்டது. அவசர அவசரமாக வெளியேறினார் நரேந்திர மோடி.
அப்படியே முதல்வன் படத்தில் ரகுவரன், அர்ஜுன் நடித்த காட்சி போலவே இருந்தது. விஷயம் என்னவென்றால், கரன் தாப்பர் கேட்டது கோத்ரா மற்றும் குஜராத் கலவரம் பற்றிய கேள்விதான். மோடி பதிலளிக்கத் தடுமாறியது அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தக் காட்சிகள் குஜராத் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்தது.
மோடியின் தடுமாற்றத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹல்கா இணையதளம் சென்ற வாரம் வீடியோகாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோத்ரா தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான ஹரேஷ் பட் உள்ளிட்ட சிலருடைய பேட்டிகள் ஒளிபரப்பாகின. அவர்கள் அத்தனை பேருமே கோத்ரா மற்றும் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்.
ரகசிய கேமரா மூலம் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பது தெஹல்காவுக்கு வழக்கமான விஷயம்தான். இந்தமுறை அவர்கள் குறிவைத்தது நரேந்திர மோடியை. இதற்காக கோத்ரா சட்டமன்ற உறுப்பினர், குஜராத் கலவரத்தில் களத்தில் இறங்கி செயல்பட்ட ஏழு பேர், மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரசு வழக்கறிஞர் ஒருவர் மற்றும் ஐந்து குஜராத் கரசேவகர்கள் ஆகியோருக்கு வலை விரிப்பது என முடிவு செய்தது தெஹல்கா நிருபர் குழு. இவர்களுக்குத் தலைமை, ஆஷிஷ் கெய்தான் என்கிற நிருபர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தனர்.
அய்யா, நாங்கள் இந்துத்வாவைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தின் பெயர் 'வி.ஹெச்.பி.யும் இந்துத்வாவும். அதற்கு உங்களுடைய கருத்துக்கள் அவசியமாகின்றன. புத்தகத்துக்காக நாடு முழுக்கத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறோம். நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். நீங்களும் பேசினால் புத்தகம் மிகச்சிறப்பாக வரும். குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்துத்வத்தின் பெருமை எல்லோர் மத்தியிலும் பரவும்.'
இதுதான் அந்த நிருபர் ஆஷிஷ் கெய்தான் விரித்த வலை. இந்துத்வா பரவும் என்கிற வார்த்தைகள் அவர்களைச் சுண்டி இழுத்துவிட்டன. மளமளவென நடந்த சம்பவங்களை வார்த்தை விடாமல் ஒப்பித்துவிட்டனர்.
அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் அவர்கள்?
ஒவ்வொரு நபராகப் பார்க்கலாம்.
சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.
மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:
வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.
அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:
எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
பிரகாஷ் ரத்தோட்:
பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள் என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.
சுரேஷ் ரிச்சர்ட்:
முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.
அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:
கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.
வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:
மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!
மேலே இருக்கும் கருத்துகள் அத்தனையும் குஜராத் கலவரத்துக்கு மோடியின் பங்களிப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராமர் பால விவகாரம் தங்களுக்குத் தேனை வார்க்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தேளை வார்த்திருக்கிறது தெஹல்கா வீடியோ.
விரைவில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்த வீடியோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யப் போகிறார் மோடி?
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்.
Labels: இந்துத்வா, குஜராத், படுகொலைகள்
10.29.2007
நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! - வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்- 3
பகுதி-1, பகுதி-2
கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள்.
திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த வித்தியாசமுமின்றி முஸ்லிம்கள் வாழும் பகுதிகள்
குறிவைக்கப்பட்டது. பெருமளவில் காவிக்கும்பல் ஒரே நோக்கத்தின்கீழ் ஒன்று சேர்ந்தது. எந்த வகையிலேனும் முஸ்லிம்களை கொல்லவேண்டும். குத்தி, கிழித்து முடமாக்கப்பட்டபின் உயிரோடோ, இல்லாமலோ.
இதில் பங்கெடுத்துக்கொண்ட காவிக் கும்பல்களில் சிலர் தெஹல்காவிடம், இஸ்லாம் எரியூட்டுவதை அனுமதிக்கவில்லை என்பதால் முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொல்வதிலேயே ஆனந்தமடைந்ததாக சொன்னார்கள்.
பெப்ருவரி 27 க்குப்பிறகு, மூன்று நாட்கள் குஜராத்தின் பிஜெபி அரசை இந்துத்வ காவிக்கும்பல் கையிலெடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டதிற்க்கு இட்டுச்சென்றது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்தள், கிசான் சங்க், அகிலபாரதீய வித்யார்தி பரிஷத், பிஜெபி, கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கொலைப்படை உருவாக்கப்பட்டது. மாநிலமெங்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன. 73 முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் அஹமதாபாதில் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டது. சபர்கந்தாவில் 55 ம் வடோடராவில் 22ம் பின்னர் கொளுத்தப்பட்டது.
மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள்...
தெஹல்கா.காம்.
(தொடரும்)
Labels: இந்துத்வா, குஜராத், படுகொலைகள்
நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! - வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்- 2
பகுதி - 1
இப்படி கோத்ரா நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய பிறகு நரேந்திர மோடி சம்பவ இடத்திற்க்கு வருகிறார். அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் முஸ்லிம்களின் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவதற்க்கு சங்க்பரிவாரங்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறது.
அதே இரவு பிஜெபி சங்க்பரிவாரக் கும்பல் அஹமதாபத், வடோடரா மற்றும் கோத்ராவில் கூடி மாநிலம் முழுக்க முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த தீர்மானிக்கின்றன.
கொலைகாரர்களை சட்டத்திலிருந்து காப்பாற்றுவதற்க்காக நீண்டகால திட்டம் தீட்டப்படு வக்கீல்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் விவரிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைகளுக்கெல்லாம் சூத்திரதாரி மோடி தான் என்பது கொலைகாரக் கும்பலுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்திலிருந்தே காவல்துறை காவிக்கும்பலுக்கு உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், அங்காங்கே அவர்களுடன் சேர்ந்தே அஹமதாபத் கமிஷனர் பண்டே தலைமையில் அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டது. கமிஷனரே தன்னுடைய ஜூனியர் அதிகரிகள் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியுமாறு பார்த்துக்கொண்டார். கடமையை செய்ய முயன்ற அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன.
வெடிகுண்டு, துப்பாக்கி, திரிசூலம் போன்ற ஆயுதங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து சங்க் பரிவாரின் சானல்கள் வழியே காவிக்கும்பலால் கடத்திக்கொண்டுவரப்பட்டு வினியோகிப்பட்டன. தேவையான ஆயுதங்கள் தயரிக்கப்பட்டன. பஜ்ரங்தள், VHP போன்ற 'தேசபக்தி' மிகுந்த இயக்கங்களில்
ஏராளமான ஆயுதக்குவியல் எற்கனவே இருந்திருக்கிறது.
பிஜெபி மற்றும் சங்க் பரிவாரக் காவிக்கும்பலின் தலைவர்கள் இந்த இரத்தம் குடிக்கும் ஓநாய்களை அஹமதாபத், சபர்கந்தா, வடொடரா போன்ற இடங்களில் தலைமை தாங்கி வழிநடத்தினர். காவல் துறை இந்த வெறியாட்டத்திற்க்கு காவல்(?) நின்றது.
பிஜெபி எம்.எல்.ஏ மாயபென் கொட்னானி, விஹெச்பி யின் அதுல் வேத் இவர்கள் இருவரும் கலவரம் நடந்த நாட்களில் தினமும் கலவரப்பகுதிக்கு சென்று மேற்பார்வை(!) இட்டனர். இன்றுவரை இவர்கள் ஜெயிலின் வாசற்படியே மிதித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெருப்பு தான் இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆயுதமாக இருந்தது. எரிப்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பதே முசஸ்லிம்களை எரித்துக்கொல்வதற்க்கு மிகுந்த ஆனந்தமாக இருந்தது.
பாபு பஜ்ரங்கி, 23 ரிவால்வர்கள் காவிக்கும்பலின் ஒரு பகுதியினரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும், VHP யின் செக்ரெடரி ஜயதீப் பட்டேல் மற்றும் அப்போதைய அமைச்சர் கோர்தன் சடொபியா வையும் 11 முறை தொடர்பு கொண்டு கொல்லப் பட்டோரின் எண்ணிக்கையும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
தெஹெல்காவின் கட்டுரை.
(தொடரும்)...
Labels: இந்துத்வா, குஜராத், படுகொலைகள்
10.28.2007
நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! - வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்-1
சுமார் ஐந்து ஆண்டு காலமாக நரேந்திர மோடியின் பிஜெபி அரசும் காவிக்கும்பலும், கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் துக்கத்தைத்தான், 2002 ல் குஜராத்தில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்பட்ட கொடூரக் கொலை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் ஆகியவற்றிற்க்கு காரணமாக காட்டிக் கொண்டிருக்கிறது. தெஹெல்காவின் ஆறுமாத புலனாய்வில் இதன் பின்னணியில் உள்ள பொய்கள், அரசாங்கமே அடியாட்களுக்கு உத்தரவுகளும், லஞ்சமும் கொடுத்து நடத்திய கலவரத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.
இதோ, சுருக்கத்தில், நடந்ததாக கண்டறியப்பட்ட உண்மைகள்......
காவல் துறையின் வாதம் :
1. சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியை February 27, 2002 ல் சதிசெய்து கொளுத்தினார்கள். (கவனிக்க: எதேனும் ஒரு பெட்டியை அல்ல. குறிப்பாக எஸ்-6 பெட்டியை ).
2. முஹம்மது ஹுஸைன், அப்பொதைய கோத்ரா முனிசிபல் கவுன்சில் தலைவர், இரண்டு முஸ்லிம் முனிசிபல் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த ரயில் பெட்டியை எரிக்கும் குழுவில் இருந்து, எஸ்-6 பெட்டியை எரிக்க தூண்டினார்கள்.
3. போலீஸின் கூற்றுப்படி, எராளமான பெட்ரோல் எஸ்-6 ன் தளத்தில் ஊற்றி, பின் கொளுத்தப்பட்டது. இதற்க்காக 140 லிட்டர் பெட்ரோல் பெப்ருவரி 28ம் தியதி, கலாபாய் என்ற ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான பெட்ரோல் பம்பில் இருந்து வாங்கப்பட்டது. பின் 9 முஸ்லிம் கூலிதொதொழிலகளாலும், ஒரு ஹிந்து தொழிலாளியாலும் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் நின்றுகொண்டிருந்த காபின் A க்கு கொண்டுவரப்பட்டது.
4. சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியின் இணைப்பை மூன்று முஸ்லிம் தொழிலாளர்கள் துண்டித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.
5. சில தொழிலாளிகள் 6 இன்ச் கனமுள்ள இரு பெட்டிகளையும் இணக்கும் தொடர்பை சாதாரண கத்தரிக்கோலால் வெட்டிய பிறகு எஸ்-6 க்குள் நுழைந்து பெட்டியின் தரையில் பெட்ரோலை ஊற்றினார்கள். கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் ஊற்றப்பட்டது.
மேற்சொன்ன காவல் துறையின் 'தியரி' க்கான சாட்சிகள் :
1. போலீஸ் பெரும்பாலும் சம்பவத்தை நேரில் பார்த்த 9 பிஜேபி உறுப்பினர்களின் சாட்சியையே முக்கியமாக எடுத்தொக்கொண்டிருக்கிறது. இவர்கள் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டியிருக்கிறர்கள். (ஒரு பிஜெபி உறுப்பினர் திலீப் தேஸாதியா, பிறகு தன்னுடைய வாக்குமூலத்தை முழுவதுமாக வாபஸ் வாங்கிக்கொண்டார்.)
2. எஸ்-6 ல் பயணம் செய்த கர்சேவகர்களின் வாக்குமூலங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
3. அங்கு ஏற்பட்ட புகையால் மயங்கிவிட்டதாகவும், என்ன நடந்தது என்றே காண இயலவில்லை என்றும் சொன்ன இரண்டு கரசேவர்கள், ஆறு மாதங்களுக்கு அப்புறம், தங்கள் நிலையை மாற்றி வெளியிலிருந்து எதோ திராவகம் தரையில் ஊற்றப்பட்டதை பார்த்ததாக சொன்னார்கள். இந்த வாக்குமூலம் தான் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்க்கு 15 தினங்களுக்குமுன் சேர்க்கப்பட்டு - போலீஸ் தியரியின் திடீர் சக்தியாக மாற்றப்பட்டுள்ளது.
4. போரென்சிக் ரிபோர்டின்படி, " 60 லிட்டர் பெட்ரோல் தென் திசையிலிருந்து பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டிருக்கலாம் " என்பது.
5. ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு, ஒரு டீக் கடை காரர், அஜய் பாரியா என்ற ஒரு சாட்சியை போலீஸ் திடீரென்று கொண்டு வந்து நிறுத்தியது. இந்த அஜய் பாரியா, தன்னை 9 முஸ்லிம் தொழிலாளிகள் எஸ்-6 பெட்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்குமாறு கட்டயப்படுத்தியதாக விளம்பினார்.
6. இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் கைது செய்த ஒரு வாரத்திற்க்கப்புறம், ட்ரயின் இணைப்பைத் தாங்கள் துண்டித்ததாக ஒப்புக்கொண்டார்கள். அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.
7. இதே போல் இன்னொரு முஸ்லிம் தொழிலாளி எஸ்-6 பெட்டியை கொளுத்திய கும்பலில் தானும் இருந்ததாக ஒப்புக்கொண்ட (?) வர், அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்.
8. சம்பவம் நடந்து 1 வருடம் கழித்து போலிஸ் இரண்டு இந்து சேல்ஸ்மேன்களை ஆஜர் படுத்தியது. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல்.
இவர்கள் இருவர்தான், பெட்ரொல் பம்பிலிருந்து 140 லிட்டர் பெட்ரோலை விற்ற சேல்ஸ்மேன்கள். இவர்க்ளுள் ஒருவர், அன்றைய தினத்தில் அப்படி யாருக்கும்ம் பெட்ரோல் விற்கவில்லை என்று தெரிவித்தார்.
9. இன்னொரு போலிஸின் சாட்சி, சம்பவ இடத்தில் இருந்த மற்ற முஸ்லிம் தலைவர்களுடன் மவுலவி யாக்கூப் பஞ்சாபி என்பவரும் கொளுத்த தூண்டிவிட்டார் என்று சாட்சி சொன்னார். பின்பு பொலீஸ் பஞ்சாபியை கைது செய்து பின் விட்டுவிட்டது. காரணம் பஞ்சாபி அந்த நாட்களில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே.
10. இன்னும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், கொளுத்தியதாகவும் 'ஒப்புக்கொண்ட' ஆறு முஸ்லிம் தொழிலாளிகள், பின்னர் தங்களுடைய வாக்கு மூலத்தை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.
இனி தெஹல்கா கண்டறிந்த கொடுமையான உண்மைகள்...
1. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல் என்ற இரு பெட்ரோல் பம்ப் சேல்ஸ்மேன்களுக்கும், தலைமை விசாரணை அதிகாரியே லஞ்சம் கொடுத்து, இப்படிச் சொல்லவும், தவறான நபர்கலை அடையாலம் காட்டவும் பணித்தார். தெஹெல்க்காவின் கேமராவில் அந்த அதிகாரியே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 50,000 ரூபாய் இதற்க்காக் இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.
2. சம்பவத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்பட்ட 9 பிஜெபி நபர்க்ளும் அப்பொழுது அந்த இடத்திலேயே இருந்திருக்கவில்லை. தெஹெல்க்கா அவர்க்ளுள் இருவரை - Kakul Pathak and Murli Mulchandani - பேட்டி கண்டதில் தாங்கள் அந்த இடத்திலேயே இல்லை என்றும், தாங்கள் பெயெர் இருப்பது தாங்களுக்கே தெரியாது என்றும் கூறினர்.
3. பெட்டியின் இணைப்பை துண்டித்ததாக சொல்லப்பட்ட இரு முஸ்லிம் தொழிலாளிகளும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், (பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்தியது உட்பட ) தெஹெல்க்காவிடம் அனுமதித்தனர்.
4. பெட்ரோல் எப்படி எங்கிருந்து ஊற்றப்படு எப்படி எரிக்கப்பட்டது என்ற போலீஸின் கூற்றும், போரென்சிக் லாபின் கூற்றும் முற்றிலும் மாறுபடுகிறது.
இது இந்துத்வா நடத்திய கபட நாடகம் ( ஜெயராமன் சல்மா அயூப் நியாபகம் வருகிறதா..? ) வெளிச்சத்திற்ற்கு வந்தது மட்டும்...இனிதான் காவிக்கும்பலின் நரபலி வேட்டைவிழாவின் துவக்கம். கொலைகள், கற்பழிப்புகள், சிசுக்கொலைகள் நடத்திய விதம், பேட்டிகள், செய்முறைகள், உத்தரவுகள்....
மூலம் :
http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Conspirators.asp
(தொடரும்)
12.20.2006
நெஞ்சு பொறுக்குதில்லையே.....!!

நல்லாரை உழைப் போரைப்
பறையர் என்றார்;
நயவஞ்ச முடையோர் மேற்சாதி என்றார்!
பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை அதன்
பட்டினி யழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்
இட்டு வணங்குகின்றார், முக்திக் கென்றே!
---ப.ஜீவானந்தம்
தினகரன் டிச 21 புகைப்படம்.
8.19.2006
குஜராத்தின் கல்விஅமைச்சுக்கு....
குஜராத்தில் சமீபத்தில் நடந்த ஒரு பொதுத்தேர்வில், கேட்கப்பட்ட சில கேள்விகளை இந்த்ப்பதிவில் பார்த்தேன். வருங்காலத்தில் தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்காக எதோ நம்மாலான சிறு உதவி....
1.கீதாவுக்கு 32 வயது. புதன் வியாழனிலும், சுக்கிரன் செவ்வாயிலும் இருந்தால், கீதாவின் திருமண வயதைக் கணக்கிடுக.
2. ஒரு முழு வட்டத்தில் 'அகண்ட பாரதம' போக மீதி எவ்வளவு இருக்கும்?
3. உணவுக்காக ஒரு மாட்டின் தோலை 4 தலித்கள் உரித்தால், 4 தலித்களின் தோலை உரிக்க எத்த்னை இந்துத்வாதிகள் தேவை?.
4. அமெரிக்கா, மோடிக்கு விசா மறுக்க காரணம்
அ). ஒரே பேட்டையில் இரண்டு ரவுடிகள் இருக்கக் கூடாது
ஆ). மோடி முன்னமேயே organised killing நடத்த அனுமதி வாங்கவில்லை
இ). மேலே குறிப்பிட்ட இரண்ட்டும்
5. "sati formed a part of Hindu faith and no woman wishing to be sati could be deprived." - என்ற பொன்னான வாக்கியத்திற்கு சொந்த்க்காரர்
அ). Vijayraje Scindia
ஆ). உமாபாரதி
ஏ). அத்வானி
6. கான்சர் முதல் ஹிஸ்டீரியா வரை குணப்படுத்தும் சர்வலோக நிவாராணி
அ). பசு மூத்திரம்
ஆ).மாட்டுச்சாணம்
எ) . இரண்டும்
கதிரவன்
Labels: இந்துத்வா