10.29.2007

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! - வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்- 2

பகுதி - 1

இப்படி கோத்ரா நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய பிறகு நரேந்திர மோடி சம்பவ இடத்திற்க்கு வருகிறார். அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் முஸ்லிம்களின் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்துவதற்க்கு சங்க்பரிவாரங்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறது.

அதே இரவு பிஜெபி சங்க்பரிவாரக் கும்பல் அஹமதாபத், வடோடரா மற்றும் கோத்ராவில் கூடி மாநிலம் முழுக்க முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த தீர்மானிக்கின்றன.

கொலைகாரர்களை சட்டத்திலிருந்து காப்பாற்றுவதற்க்காக நீண்டகால திட்டம் தீட்டப்படு வக்கீல்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் விவரிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைகளுக்கெல்லாம் சூத்திரதாரி மோடி தான் என்பது கொலைகாரக் கும்பலுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே காவல்துறை காவிக்கும்பலுக்கு உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், அங்காங்கே அவர்களுடன் சேர்ந்தே அஹமதாபத் கமிஷனர் பண்டே தலைமையில் அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டது. கமிஷனரே தன்னுடைய ஜூனியர் அதிகரிகள் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியுமாறு பார்த்துக்கொண்டார். கடமையை செய்ய முயன்ற அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன.

வெடிகுண்டு, துப்பாக்கி, திரிசூலம் போன்ற ஆயுதங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து சங்க் பரிவாரின் சானல்கள் வழியே காவிக்கும்பலால் கடத்திக்கொண்டுவரப்பட்டு வினியோகிப்பட்டன. தேவையான ஆயுதங்கள் தயரிக்கப்பட்டன. பஜ்ரங்தள், VHP போன்ற 'தேசபக்தி' மிகுந்த இயக்கங்களில்
ஏராளமான ஆயுதக்குவியல் எற்கனவே இருந்திருக்கிறது.

பிஜெபி மற்றும் சங்க் பரிவாரக் காவிக்கும்பலின் தலைவர்கள் இந்த இரத்தம் குடிக்கும் ஓநாய்களை அஹமதாபத், சபர்கந்தா, வடொடரா போன்ற இடங்களில் தலைமை தாங்கி வழிநடத்தினர். காவல் துறை இந்த வெறியாட்டத்திற்க்கு காவல்(?) நின்றது.

பிஜெபி எம்.எல்.ஏ மாயபென் கொட்னானி, விஹெச்பி யின் அதுல் வேத் இவர்கள் இருவரும் கலவரம் நடந்த நாட்களில் தினமும் கலவரப்பகுதிக்கு சென்று மேற்பார்வை(!) இட்டனர். இன்றுவரை இவர்கள் ஜெயிலின் வாசற்படியே மிதித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெருப்பு தான் இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆயுதமாக இருந்தது. எரிப்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்பதே முசஸ்லிம்களை எரித்துக்கொல்வதற்க்கு மிகுந்த ஆனந்தமாக இருந்தது.

பாபு பஜ்ரங்கி, 23 ரிவால்வர்கள் காவிக்கும்பலின் ஒரு பகுதியினரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும், VHP யின் செக்ரெடரி ஜயதீப் பட்டேல் மற்றும் அப்போதைய அமைச்சர் கோர்தன் சடொபியா வையும் 11 முறை தொடர்பு கொண்டு கொல்லப் பட்டோரின் எண்ணிக்கையும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

தெஹெல்காவின் கட்டுரை.

(தொடரும்)...

2 Post comments:

Anonymous said...

ungkal muyarchi thodarattum

Anonymous said...

கதிரவன்

இந்துத்வாவின் கொடுமையை நன்றாக எழுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்