8.12.2006

வரலாற்றில் கெட்ட சம்பவங்களை மறத்தல் கூடாது...

எனக்கு மிகவும் பிடித்த கருத்துக்களுள் ஒன்று....

என்னைச் சுற்றியுள்ள..எனது நண்பர்களிடமு இதை நான் சொன்னால் மாங்கா மடையர்கள் ...அதெல்லாம் அந்தக்காலம் என்று சொல்லிவிடுகிறார்கள்....

அருமையான இந்த வாக்கியத்தை இந்தப்பதிவில் பார்த்ததுமே ..அடடா எவ்வளவு உன்னதமான கருத்து ... என்னே அதிலிருக்கும் நேர்மை என்று ஒரே புளங்காகிதமாகிப் போய் இந்தப் பதிவையே பதிக்க வந்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

இந்தக் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பட்டதே....எனக்கு என்ன எனக்கு, நியாயமான எவருக்கும் உடன்பட்டதாகத்தானே இருக்கவேண்டும்?...சந்தேகமே இல்லை.

ஆனால் என்ன, இந்த வரலாறு என்பது இந்த வருடத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது என்பது தான் கொஞ்சம் இடிக்கிறது. நான் படித்த ஆரம்பப் பள்ளிகளில் எல்லாம் இந்திய வரலாறு என்பது 'சிந்து சமவெளி நாகரீகம்'' என்றுதானே தொடங்கும் ?.அந்த அளவிலிருந்து தானே நினைவுச்சின்னம் வைக்கவேண்டும்...முதல் கெட்ட சம்பவமே ஆரியப்படையெடுப்பு தானே?

அதற்க்கு முதலில் முதல் நினைவுச்சின்னம் வைக்கவேண்டுமே....

கதிரவன்.






0 Post comments: